Thursday, 16 April 2020

விழி அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம்

தமுமுகவின் மனிதவள மேம்பாட்டு அணியான விழி அமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இணையத்தின் ஊடாக 23.03.2020 அன்று சிறப்பாக நடைபெற்றது.


தமுமுக-மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமுமுக பொதுச்செயலாளர் (பொறுப்பு) பேரா.ஹாஜாகனி, விழி அமைப்பின் மாநிலச் செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா, மாநிலப் பொருளாளர் பேரா.அபுல் பாசல், மாநில துணைச் செயலாளர்கள் பொறியாளர் அப்துல் சமது, புதுமடம் ஹலீம், சாகுல் ஹமீது ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்தனர்.

விழி அமைப்பின் சார்பாக விரைவில் நடைபெற இருக்கின்ற பயிற்சியாளர்களை உருவாக்கும் திட்டம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான திட்டங்கள் உள்ளிட்டவை கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment