Wednesday, 17 February 2016

துபாயில் நடைபெற்ற இரத்ததான முகாம்

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக இன்று 22-01-2016 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிமுதல் 11:30 மணிவரை துபை லத்திஃபா மருத்துவ மனையில் இரத்ததானம் முகாம் நடைப்பெற்றது.
அனுமதி வழங்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் 61 சகோதரர்கள் இரத்தம் வழங்கினர்
சிறப்பாக நடைப்பெற்ற முகாமில் அமீரக தமுமுக செயலாளர் அப்துல்ஹாதி, துணைச்செயலாளர் ஹூஸைன் பாஷா, தொழிலதிபர் அபுதாஹீர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்
மண்டல தமுமுக செயலாளர் அப்துல்ஹமீது மண்டல பொருளாளர் ஷேக் தாவூத் துணைச்செயலாளர்கள் முஸ்தாக் பொறையார் பர்ஜிஷ் 
மமக செயலாளர் இப்ராஹீம் உள்ளிட்ட மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்னர்

எல்லாப்புகழும் இறைவனுக்கே!

துபாயில் நடைபெற்ற தலைமைத்துவம் குறித்த பயிற்சி


தமுமுக துபை மண்டலத்தின் தேரா மர்க்கஸில் 22-01-2016 வெள்ளிக்கிழமை இரவு
8:30 மணியளவில் தலைமைத்துவத்திற்கான பயிற்சி
வகுப்பு நடைப்பெற்றது.

அமீரக தமுமுக துணைச்செயலாளர் ஹூஸைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு பயிற்றுவித்தார்கள். பயிற்சியில் தலைமைத்துவத்திற்கான அடிப்படை பண்புகள், திறன்களை வளர்த்தல் உள்ளிட்ட தலைமைத்துவத்திற்கான பண்புகளை இஸ்லாமிய அடிப்படையிலும் பொதுவான வரலாற்றிலிருந்தும் பயிற்றுவித்தார்.


நிகழ்ச்சி கலந்துகொண்ட அனைவருக்கும் பயனுள்ள நிகழ்வாக இருந்தது.

News: Kunangudi Mohideen

ஷார்ஜா மண்டல தமுமுக புதிய நிர்வாகிகள் தேர்வு

ஷார்ஜா மண்டல தமுமுக செயற்குழுக் கூட்டம் 29.01.2016, வெள்ளிக்கிழமை அன்று அமீரகச் செயலாளர் அதிரை N. அப்துல் ஹாதி தலைமையில் ஷார்ஜாவில் நடைபெற்றது. தன் தலைமையுரையில் சமுதாயப் பணிகளின் அவசியத்தையும், தமுமுக-வின் கடந்த கால செயல்பாடுகளையும் குறித்து எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே இருந்த மண்டல நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகளை அமீரக துணைச்செயலாளர் ஹூஸைன் பாஷா தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்வு செய்தார்.

புதிய நிர்வாகிகள்:
செயலாளர் : பொறியாளர் முஹம்மது கஜ்ஜாலி, கொடிக்கால்பாளையம்
பொருளாளர் : A. முஜிபுர் ரஹ்மான், விழுப்புரம்
துணைச்செயலாளார்கள்:
அப்துல் நாசர்
ஜலீல் ரஹ்மான்
அமீன்

வீரியமிக்க செயல்பாடுகளை சீரிய முறையில் செய்வதற்கு உறுதிபூண்டவர்களாக அடுத்தடுத்து செய்ய வேண்டிய மக்கள் நல பணிகளைக் குறித்து புதிய பொறுப்பாளர்கள் ஆலோசனை செய்தனர்.



MS OUTLOOK CONTACTS - TRAINING PROGRAM

Microsoft Outlook Contacts - Training Program was conducted by Mr. Hussain Basha (Manager - Corporate Affairs) at Corporate Office, Sharjah on 4th February - 2016.





சிங்கப்பூரில் உணர்வாய் உன்னை! புத்தகம்

வாழ்த்துங்கள்.. வளர்கிறோம்..
சிங்கப்பூரில்
வாசகன் பதிப்பக நூல்கள்..
சிங்கப்பூரின்
பெருமைமிகு தமிழர்
ஐயா முஸ்தபா முஹம்மது அவர்களின்
சிங்கப்பூர் தமிழ் மையம்
எனும் புத்தகக்கண்காட்சி
மற்றும் விற்பனை மையத்தில்...
எங்கள்
வாசகன் பதிப்பகத்தின்
பெருமைமிகு நூல்களான..
கவிஞர் தியாக. இரமேஷ் அவர்களின்
மரப்பாச்சி பொம்மைகள்
கவிஞர் ச. கோபிநாத் அவர்களின்
குழந்தைகளைத் தேடும் கடவுள்
ஜனாப் ஹுஸைன் பாஷா அவர்களின்
உணர்வாய் உன்னை..!
கவிதாயினி ஷர்மிவீரா அவர்களின்
திமிரும் நீயும் ஒரே சாயல்
கவிஞர் கி. கோவிந்தராசு அவர்களின்
இசைப்பாட்டு இலக்கியம்
கவிஞர் ஏகலைவன் அவர்களின்
வயிறு மட்டும் வாழ்க்கையல்ல..
உள்ளிட்ட பல நூல்கள்
விற்பனையில்..
நன்றி.. 

நூல்களை தமிழகத்தில்
நேரில் பெற்றுக் கொண்டு..
சிங்கப்பூர் கொண்டுசேர்த்து
எங்கள் வாசகன் பதிப்பக
வளர்ச்சிக்கு உதவிய
இனிய நண்பர்
திரு தியாக. ரமேஷ் அவர்களுக்கு
நன்றி.. நன்றி..

இப்படிக்கு,

கவிஞர் ஏகலைவன்






Friday, 12 February 2016

"புறம்" குறும்படம்

சமாதானக் கலைவிழாவில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டுதலைப் பெற்ற குறும்படம்