Monday, 25 January 2016

துபாயில் நடைபெற்ற தலைமைத்துவ பயிற்சி







தமுமுக துபை மண்டலத்தின் தேரா மர்க்கஸில் 22-01-2016 வெள்ளிக்கிழமை இரவு
8:30 மணியளவில் தலைமைத்துவத்திற்கான பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.

அமீரக தமுமுக துணைச்செயலாளர் ஹூஸைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு பயிற்றுவித்தார்கள். பயிற்சியில் தலைமைத்துவத்திற்கான அடிப்படை பண்புகள், திறன்களை வளர்த்தல் உள்ளிட்ட தலைமைத்துவத்திற்கான பண்புகளை இஸ்லாமிய அடிப்படையிலும் பொதுவான வரலாற்றிலிருந்தும் பயிற்றுவித்தார்.

நிகழ்ச்சி கலந்துகொண்ட அனைவருக்கும் பயனுள்ள நிகழ்வாக இருந்தது.

தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக இரத்ததான முகாம்










இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக இன்று 22-01-2016 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிமுதல் 11:30 மணிவரை துபை லத்திஃபா மருத்துவ மனையில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது
முகாமில் ஆர்வத்தோடு தமுமுக மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் மாற்றுமத நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர் நேரம் போதாத காரணத்தினாலும் மருத்துவ மணையின் இரத்த வங்கி நிர்வாகம் குறிப்பட்ட நேரத்தில் 50 
நபர்களுக்கு மாத்திரம் இரத்ததானம் செய்ய அனுமதி என்பதாலும் பல சகோதரர்கள் இரத்தம் கொடுக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர் அல்லாஹ் அவர்களின் சிறந்த நோக்கத்திற்கு நன்மையை வழங்குவானாக
அனுமதி வழங்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் 61 சகோதரர்கள் இரத்தம் வழங்கினர்.
சிறப்பாக நடைப்பெற்ற முகாமில் அமீரக தமுமுக செயலாளர் அப்துல்ஹாதி, துணைச்செயலாளர் ஹூஸைன் பாஷா, தொழிலதிபர் அபுதாஹீர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்
மண்டல தமுமுக செயலாளர் அப்துல்ஹமீது மண்டல பொருளாளர் ஷேக் தாவூத் துணைச்செயலாளர்கள் முஸ்தாக் பொறையார் பர்ஜிஷ்மமக செயலாளர் இப்ராஹீம் உள்ளிட்ட மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்னர்
எல்லாப்புகழும் இறைவனுக்கே.


Annual Meeting






Annual Meeting of National Elevators held in Al Ain on 15.01.2016