Saturday, 26 April 2014

உலக அமைதிக்காக சைக்கிளில் உலகம் சுற்றும் நேபாளி

உலகில் அமைதியை வலியுறுத்தும் நோக்கத்தில் சைக்கிளில் உலகம் சுற்றும் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர். கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து தமது சைக்கிள் பயணத்தை தொடங்கிய 'லோக் பந்து கார்கி' என்ற அந்த நபர் இது வரை 97 நாடுகளுக்கு விஜயம் செய்து அமைதியைப் பற்றி பரப்புரை செய்திருக்கிறார். மேலும் 2017ம் ஆண்டுக்குள் 157 நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

படைப்புகள் அணைத்தும் ஒரு இறைவனால் படைக்கப் பட்டது.... எல்லா மனிதர்களும் இறைவனின் பார்வையில் சமமானவர்களே என்கிற மனித சமூகத்துக்கு தேவையான பேருண்மையை செல்லுமிடங்களில் அவர் சொல்லிவருகிறார்.

தற்போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சில நாள்கள் தங்கி பிரச்சாரம் செய்ய உள்ள அவரை தமிழகத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் யாசின் நூருல்லாஹ், ஹூசைன் பாஷா, பொறியாளர் ராஜா முஹம்மது ஆகியோர் சந்திந்து வாழ்த்து தெரிவித்தனர்.

- கொள்ளுமேடு ரிபாயி

World cyclist brings message of peace to U.A.E.

World cyclist brings message of peace to U.A.E.

Lok Bandhu Karki has visited 97 countries since 2004 and his target is to
visit 153 countries by 2017. He can tell you each one in order. More
impressive than that, he visited all of them by bicycle.

Karki arrived at Al Ain City in the UAE on 24.04.2014. He said the purpose
of his globe-spanning "mission" is to spread the message of world peace and
universal brotherhood.

"The main fact among us is that we all are humans," Karki said. "All
creations of one God. Every human is equal in the creator's eyes."

Karki, who is staying with a local Nepalese family, will be in the UAE for
the next few days. I met him with my colleagues in Al Ain and encouraged him
for his efforts.

- Hussain Basha

Tuesday, 1 April 2014

மக்காவில் நடைபெற்ற நேரமேலாண்மை பயிற்சி முகாம்

29-03-2014 அன்று மக்கா இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக மௌலவி ஜியாத் மக்கி தலைமையில் நேரமேலாண்மை பயிற்சி முகாம் ஹூசைன் பாஷா அவர்களால் நடத்தப்பட்டது.

ஜித்தாவில் நடைபெற்ற நேர மேலாண்மை பயிற்சி முகாம்

28-03-2014 அன்று ஜித்தா இஸ்லாமிய அழைப்பு மையத்தில் நடைபெற்ற நேர மேலாண்மை பயிற்சி முகாமில் தமுமுக சவுதி மேற்கு மண்டலத் தலைவர் அப்துல் மஜித் தலைமை தாங்கினார்.

தமுமுக ஜித்தா மண்டலத் தலைவர் மௌலவி இம்தாதுல்லாஹ் ஜமாலி கிராத் ஓதினார். தமுமுக சவுதி மேற்கு மண்டலத் துணை செயலாளர் கீழை. இர்பான் அறிமுக உரையாற்றினார்.

பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை மிகவும் பயனுள்ள வழியில் தமுமுக அமீரக துணைத்தலைவர் ஹூசைன் பாஷா சிறப்பாக நடத்தினார்.

தமுமுக மேற்கு மண்டலத் துணைத்தலைவர் இபுராகிம் அவர்கள் நன்றியுரையாற்றினார். ஜித்தா தமுமுக நிர்வாகிகள் ராஜா முகம்மது அப்துல் மஜித் மற்றும் இஸ்லாமிய அழைப்பு மையம் சார்பாக சலீம் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனார். திரளாக சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.