Monday, 26 August 2013

சென்னையில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி


 சென்னை வில்லிவாக்கம் பகுதியில் சிட்கோ நகரில் 25.08.2013, ஞாயிறு அன்று காலை 09.00 மணிக்கு அகமும் புறமும் என்ற தலைப்பில் பெண்களுக்கான சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்-பெண் புரிதல் குறித்த அறிவியல், உளவியல் மற்றும் இஸ்லாமிய பார்வை, மனித வாழ்வின் மகத்துவத்தை உணருதல், வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக வாழும் முறைகள் குறித்து பெண் பொறியாளர் ஷாமிலா அவர்கள் பயிற்சி அளித்தார்.

வில்லிவாக்கம் பகுதி தமுமுக சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை சிறப்பான முறையில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.


Wednesday, 14 August 2013

சென்னையில் நடைபெற்ற ரமலான் சிறப்பு நிகழ்ச்சி

தமுமுக சார்பாக சென்னை ராயபுரத்தில் 04.08.2013 அன்று நடைபெற்ற இரவு நேர சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சியில் அமீரக தமுமுக துணைத் தலைவர் ஹூசைன் பாஷா கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

கிளைத் தலைவர் ரியாஸ் தலைமையிலான குழுவினர் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

Hypnosis NLP Training Program

Certified on Hypnosis NLP in Pradeep Aggarval's workshop in Chennai on
04.08.2013.

தமுமுக-மமக தலைமை நிர்வாகிகளுடன் அமீரக தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு

தமுமுக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது மற்றும் தமுமுக-மமக பொருளாளர் ஓ.யு.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரை அமீரக தமுமுக துணைத் தலைவர் ஹூசைன் பாஷா மற்றும் அமீரக தமுமுக அலுவலகச் செயலர் இஸ்மத் இனூன் ஆகியோர் 12.08.2013 அன்று சென்னையில் சந்தித்து பேசினர்.

மரியாதை நிமிர்த்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பில் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

Students Empowerment Program

Program on students empowerment held at SCAS campus in Namakkal on
27.07.2013