Saturday, 29 September 2012
Friday, 28 September 2012
Tuesday, 25 September 2012
Monday, 24 September 2012
Saturday, 22 September 2012
BEST CITIZENS OF INDIA AWARD
I have been chosen for “Best Citizens of India” award by BC Publishing House, New Delhi. May Allah accept our deeds & reward us in paradise.
Friday, 21 September 2012
அபுதாபி மண்டல த.மு.மு.க வின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
சகோ. பீர் முஹமது அவர்கள் கிராத் ஓதி ஆரம்பித்து வைத்தார்கள், அமீரக முமுக துணைத்தலைவர் ஹூசைன் பாஷா அவர்களின் தலைமை உரையை தொடர்ந்து அபுதாபி மண்டலத்தின் புதிய செயலாளராக கீழை அஹமத் அவர்களும் துணை செயலாளராக திருச்சி சபியுல்லாஹ் அவர்களும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அடுத்ததாக சகோ. திருச்சி அப்துர் ரஹ்மான் அவர்கள் " சமுதயாத சீர்கேடுகளும் அதிலிருந்த பாதுகாப்பை பெரும் வழிமுறைகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதைத்தொடர்ந்து சகோ. கீழை இர்பான் அவர்களுடன் இணைந்து ஆற்றிய பணிகளை அணைத்து நிர்வாகிகளும் நினைவு படுத்தினார்கள். எல்லோரின் வாழ்த்துரைகளுக்குப்பின் ஏற்புரை நிகழ்த்திய பொறியாளர்.கீழை இர்பான் அவர்கள் வாழ்த்துரை வழங்கிய அணைவருக்கும் நன்றிகூறியதோடு நான் அமைத்துக்கொண்ட பணிகள் அனைத்தும் மறுமைக்காக ஆற்றிய பணிகளே என்பதை மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
இறுதியாக நன்றிகளோடு துஆ ஓதப்பட்டு அமர்வு இனிதே நிறைவுற்றது.
H.AHAMED ABDUL KADHER
Friday, 14 September 2012
சமுதாய சேவகருக்கு பிரிவு உபசரிப்பு மற்றும் அமீரக செயற்குழு
சமுதாய சேவகருக்கு பிரிவு உபசரிப்பு மற்றும் அமீரக செயற்குழு கூட்டம் 14-09-2012 அன்று காலை 10 மணிக்கு துபாய் முமுக மர்கஸில் நடைபெற்றது. அமீரக முமுக தலைவர் அதிரை அப்துல் ஹாதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விரு நிகழ்ச்சிகளிலும் அமீரகத்தின் அனைத்து மண்டல மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அஜ்மான் மண்டலத்தின் முன்னாள் செயலாளரும், அபுதாபி மண்டலத்தின் தற்போதைய செயலாளரும், துடிப்பான சமுதாய களப்பணியாளருமான பொறியாளர்.கீழை இர்பான் அவர்கள் அமீரகத்தில் இருந்து கத்தர் நாட்டிற்கு பணி மாற்றம் கிடைத்து செல்ல இருப்பதால் அவர்களுக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சியாக அமீரக செயற்குழு துவங்கியது. துவக்கத்தில் நிகழ்ச்சியின் தலைவரும் அமீரக முமுக தலைவருமான அதிரை அப்துல் ஹாதி அவர்கள் பொறியாளர்.கீழை இர்பான் அவர்களின் கடந்த கால பணிகளை நினைவு படுத்தினார்கள். அடுத்ததாக அமீரக முமுக பொதுச்செயலாளர் அண்ணன்.கட்டிமேடு யாசின் நூருல்லாஹ் அவர்கள் பொறியாளர்.கீழை இர்பான் அவர்களின் நிகழ்கால பணிகளையும் கடந்தகால பணிகளையும் ஒப்பிட்டு வாழ்த்துரை வழங்கினார்கள். அமீரக முமுக துணைத்தலைவர் ஹூசைன் பாஷா அவர்கள் பொறியாளர்.கீழை இர்பான் அவர்களோடு அஜ்மான் மண்டலத்தில் ஆற்றிய களப்பணிகளை நிணைவுபடுத்தி உறுப்பினர்களுக்கு வியப்பையூற்றினார்கள். எல்லோரின் வாழ்த்துரைகளுக்குப்பின் ஏற்புரை நிகழ்த்திய பொறியாளர்.கீழை இர்பான் அவர்கள் வாழ்த்துரை வழங்கிய அணைவருக்கும் நன்றிகூறியதோடு நான் அமைத்துக்கொண்ட பணிகள் அனைத்தும் மறுமையை இலக்காக வைத்து ஆற்றிய பணிகளே என்பதை மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
இரண்டாவது அமர்வாக அமீரக செயற்குழு துவங்கியது, துவங்கிய வேகத்திலேயே மார்க்கப் பணிகள் மற்றும் சமுதாய பணிகள் எதிர்கால களப்பணிகள் பற்றி சுருக்கமாக விவாதிக்கப்பட்டது. பல்வேறு மண்டல நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் என அணைவரும் தங்கள் கருத்துகளை எடுத்து கூறினர். முமுகவின் சேவைகள் மற்றும் சமுதாய பணிகளை விரிவபடுத்துவது என்றும் மார்க்க அரங்குகள், சமுதாய அரங்குகள் என அனைத்து மண்டலங்களும் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது என்றும் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இறுதியாக நன்றிகளோடு துஆ ஓதப்பட்டு பொதுக்குழு நிறைவுற்றது. ஜூம்மாவின் நேரத்தை கருதி விரைவாக முடிக்கப்பட்ட பொதுக்குழுவில் கலந்துகொண்ட மன நிரைவோடும், பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த கொள்கை சொந்தங்கள் சந்தித்த மன நிறைவோடும், பொறியாளர்.கீழை இர்பான் அவர்களுக்கு வாழ்த்தி வழி அனுப்பிய சந்தோசத்தோடும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலைந்துசென்றனர். அல்ஹம்துலில்லாஹ்....
- அமீரகத்திலிருந்து முத்துப்பேட்டை முகைதீன்
Journey to my Ph.D.
May peace, mercy and blessings of God be upon you.
I have enrolled in Ph.D. program in HRM, please pray for the early completion of my research work.
Luv,
Hussain Basha
Sunday, 9 September 2012
பொறியாளர் இர்ஃபான் கத்தார் பயணம்
அல்ஹம்துலில்லாஹ்..அஜ்மானில் உள்ள அனைத்து இடங்களுக்கும் நாங்களே நடந்து சென்று மக்கள் உரிமை பத்திரிகையை மக்களுக்கு கொண்டு சேர்ப்போம். எனக்கு சில நேரங்களில் நடப்பதற்கு சிரமமாக இருந்தாலும் உற்சாகப்படுத்தி அழைத்துச் செல்வார். நாங்கள் அஜ்மான் நிர்வாகத்தில் நடத்திய மருத்துவ முகாம்கள், கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்றளவும் மக்கள் மனதில் பசுமையாக இருப்பதாக அவ்வப்போது சகோதரர்கள் தொடர்பு கொண்டு சொல்வார்கள். 2007-ம் ஆண்டு இருவரும் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலையை மாற்றியதால் அவர் அபுதாபிக்கும் நான் துபாய்க்கும் மாறிவிட்டோம். களம் வேறு ஆனால் பணி ஒன்றுதான். அவர் அபுதாபியின் செயலாளராகவும் நான் அமீரகத்தின் துணைத்தலைவராகவும் எங்கள் பணியை தொடர்ந்தோம்.
அடிக்கடி அலைபேசி அழைப்புகள், அவ்வப்போது அமைப்பு நிகழ்ச்சிகள் என எப்போதுமே தொடர்பில் இருந்திருக்கிறோம். குடும்பம், சமூகம், பொருளாதாரம் என பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்துக் கொள்ளக்கூடிய நட்பாக எங்களுடைய நட்பு அமைந்திருந்தது.
அமீரகத்தில் நடத்தப்படும் தமுமுக-வின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மக்களை ஒருங்கிணைக்கும் பணி, மீடியா மற்றும் இதர ஏற்பாடுகள் என எந்த பணியாக இருந்தாலும் ஆர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்யக்கூடிய தன்மை இர்பானுக்கு உள்ளது. அமீரகத்தில் முதன் முதலில் மக்கள் உரிமை டி-ஷர்ட்டை அறிமுகப்படுத்தியதும் அவர்தான், இன்றைக்கு பரவலாக தமுமுக-வின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த டி-ஷர்ட்டை பார்க்கும்போது இர்பான்தான் நினைவுக்கு வருவார்.
மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் இர்பான், இன்ஷா அல்லாஹ் இங்கிருந்து சென்றாலும் அவருடைய சமூக பணியை தொடர்ந்துக் கொண்டுதான் இருப்பார். அதற்கேற்ற உடல் வலிமையையும், மன வலிமையையும் வல்ல இறைவன் கொடுக்க வேண்டுமென பிரார்த்தனை செய்துக்கொள்கிறேன்.
நட்பில்,
ஹூசைன் பாஷா
09.09.2012